நடிகர்கள் பிறந்தநாளை கொண்டாடுவதில் என்ன குற்றம்???

ஒரு நண்பர் நடிகர்கள் பிறந்தநாளை கொண்டாடுவதில் என்ன குற்றம் என்று என்னை கேட்டார் !!
அதற்க்கான என்னுடைய பதில் !!
நடிகன் என்பவன் யார் ?? அவனால் நாம் ஏன் ஈர்க்கப்படுகிறோம் ?
திரையில் நாம் செய்ய நினைத்து செய்ய முடியாத காரியங்களை அவன் செய்கிறான்
அம்மாக்களை நேசிக்கிறான் தங்கச்சிகளை காப்பாற்றுகிறான் காதலிகளை காதலிக்கிறான் நாட்டையும் காப்பாற்றுகிறான் அவ்வளவும் திரையில் தான் நடக்கிறது
எப்படி செய்கிறான் ??
அவன் பின்னணியில் இயக்குனர்கள் இயக்குகின்றார்கள்
திரையில் நம்முடைய உணர்ச்சிகள் தூண்டும் அளவிற்க்கு வசனங்கள் பேசுகிறான்
எப்படி ?
அவன் பின்னணியில் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்
திரையில் ஜொலிக்கிறான் ..கண்களை பறிக்கும் அளவிற்க்கு அழகாகவும் ..சில நேரங்களில் பரிதாபாத்திற்க்கூறிய அழுக்காகவும் தென்படுகிறான்
எப்படி ?
அலங்காரம் செய்ய ஒருவன் ..அவனை அழகாக காட்ட ஒளிப்பதிவாளன் ஒருவன் .. Light manகளும் கூட
அவன் செயல்களை மிகப்படுத்த இசையின் சொந்தக்காரர்கள் இசை அமைப்பாளர்கள் ஒரு பக்கம்
நடிகனுக்கு பின்னால் இவ்வளவு இருக்கிறது ஆனால் நமக்கு தெரிவதோ நடிகன் மட்டும் தான்
இவ்வளவு தான் நடிகனின் விளக்கம் ..
நடிகன் கிட்டத்தட்ட ஒரு பொம்மை தானே !!
குழந்தையில் அப்பா பொம்மைகள் வாங்கி தருவார் .. நாம் அதை வைத்து விளையாடுவோம் .. அது தொலைந்தால் அழுவோம் .. அதை ஒரு உயிரினமாகவே பார்ப்போம் .. அதை யாராவது தொட்டால் கோபப்படுவோம் .. தோழர்களிடம் அதைக்காட்டி பெருமைப்பட்டுக்கொள்வோம் .. அதற்க்கு என்னனமோ அழகு செய்து பார்ப்போம் ..
இப்பொழுது நாம் வளர்ந்து விட்டோம் .. நம்மிடம் யார்வது ஒரு பொம்மையை கொடுத்தால் அதை நாம் குழந்தையில் எப்படி பார்த்தோமோ அப்படி பார்ப்போமா ?
இல்லையே
ஆனால் நடிகன் என்ற விஷயமும் அப்படித்தானே அதை மட்டும் ஏன் நாம சிந்திக்க மறுக்கிறோம்
“அறிவு நமக்கு வளரவில்லையா ? ”
“அட போ பா ..அவன் பிறந்த நாள் கொண்டாடினா என்ன வந்துது இப்போ ? ” என்று கேட்கலாம்
அதற்க்கு பதில்
ஒரு தந்தை பெரியார் இல்லையென்றால் பகுத்தறிவு நமக்கு வந்திருக்குமா ?
ஒரு பாரதியின் பாட்டு இல்லையென்றால் தேசப்பற்று ஊற்று நம்மில் ஓடி இருக்குமா ?
ஒரு காமராஜர் இல்லையென்றால் கல்வி கண்கள் விழித்து இருக்குமா ?
ஒரு அப்துல் கலாம் பேச்சு இல்லையென்றால் நினைத்துப் பார்க்க முடிகிறதா ?
ஒரு விவேகனாதர் …
பெரியார் எல்லாம் இல்லையென்றால் இங்கு நிலமையே வேற மேல் தட்டு சாதிக்காரர்கள் தான் இன்றும் நமக்கு முதலாளிகளாக இருந்திருப்பார்கள் .. நம்மால் ஒன்றுமே செய்திருக்க முடியாது … இன்னும் எத்தனியோ பேர் செய்த தியாகத்தாலும் சிந்திய வியர்வைகளாலும் தான் இன்று சந்தோஷமாக அரசியல் வாதிகளை கை காட்டி கொண்டு இருக்கிறோம் !!
இவர்கள் எல்லாம் இல்லையென்றால் நாம் எப்படி இருந்திருப்போம் தெரியுமா
அடிமைகளாக ..சோமாலியா போன்ற நாடுகளில் வாழும் சாகும் உயிர் ஒட்டிய ஓடுகள் போல கிடந்திருப்போம்
இதுவே ஒரு ரஜினி காந்த் இல்லையென்றால் என்னவாகி இருக்கும்
ஒரு அஜித் இல்லையென்றால்
ஒரு விஜய் இல்லையென்றால்
என்ன ??
ஒண்ணுமே ஆகி இருக்காது பாஸ்
என்னய்யா இப்போ ஏன் அத சொல்லுற ? என்று நீங்க கேட்கும் கேள்வி நெஞ்சில் படுகிறது
இங்க எத்தனை பேர் நாம் இவர்களைப்போன்ற பெரியவர்களின் பிறந்தநாளையோ இல்லை நினைவு நாளையோ நமக்கு கிடைத்திருக்கும் இந்த முகப்புத்தக மக்கள் வலைத்தளத்தில் பதிவு செய்திருப்போம் , எண்ணிக்கை மிகக்குறைவு !!
ஒரு சில பேர் கூறலாம் நான் அவர்களையும் வாழ்த்தியுள்ளேன் என்று
அது எப்படி பெரியாரும் உங்கள் தலைவர் ரஜினி கானந்தும் உங்கள் தலைவரா ??
இரண்டு பேருக்கும் ஏனி வைத்தால் எட்டுமா ?
” அட போ பா என் தலிவன் நிரய பெருக்கு உதவி செஞ்சிருக்கான் தெரியும்ல ?” என்று கேட்கிறீர்களா ?
பதில்
ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு வேலை உணவு கிடைக்கிறது அதில் ஒரு பங்கு ஒரு நாய்க்கு போட்டு விட்டு அவனும் சாப்புடுகிறான்
ஒரு பணக்காரன் காரின் உள்ளே இருந்து ஒரு பிச்சைக்காரனுக்கு 10 ரூபாய் போடுகிறான்
இதில் எது பெரிய உதவி ?
உங்க அப்பா நல்ல உடைகள் உடுத்துவதில்லை நீங்க நல்ல உடைகள் உடுத்துவதற்க்காக
ஒரு பணக்கார வீட்டில் உள்ள பழைய துணிகளை எடுத்து வீட்டு வேலைக்காரர்களிடம் கொடுக்கிறான்
இதில் எது தியாகம்
நடிகர்கள் செய்யும் உதவி எல்லாம் இப்படி தான் ..அது உதவி அல்ல சும்மா நானும் தியாகினு சொல்லிக்கொள்வதற்க்கு போடும் பிச்சை …
அதில் தவறு ஒன்றும் இல்லை அவன் சம்பாதிக்கிறான் அவன் இஷ்டத்துக்கு வாழுரான்
நாம் என் இப்படி இருக்கிறோம் ??
தோழர்களே !! கட்டபொம்மன் .. கொடி காத்த குமரன் … பெரியார் .. அண்ணா .. காமராஜர் ..
இவர்களுக்கு அப்புறம் ஒரு நல்ல தலைவர் பெயர சொல்லுங்க ??
ஏன் இன்னைக்கு நம்ம தமிழ் நாட்டில் உள்ள நல்ல தலைவர் பெரு சொல்லுங்க
சொல்லவே முடியாது …
ஏன் ??
நாம் எல்லாம் சினாமிவில் லயித்து கிடக்கிறோம் … இளைய சமுதாயம் இளைய சமுதாயம் என்று உங்கள கெஞ்சூராங்களே பெரியவங்க ஏன் ??? பெரிய பெரிய அறிங்கர்கள் தலைவர்கள் எல்லாம் உங்கள போல இளைங்கர்களா இருக்கும் போதே விழிப்புணர்வு பெற்றார்கள் .. அவர்களால் நாம் இப்போ நல்லா வாழ்ந்துட்டு இருக்கோம் .. நாம் இப்பொழுதிலிருந்தே சமுதாய சிந்தனை கொண்டால் தான் ..நம் எதிர்காலமும் நன்றாக இருக்கும்
நண்பர்களே சினிமாவும் அதைச்சார்த்தவர்களும் வெறும் பொழுதுபோக்கு தான்
அதையே நாம் வாழ்வின் பெரும் பகுதியாய் சேர்த்துக்கொண்டால் ஆவோம் நாம் பொறம்போக்கு தான்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
மறப்பது அன்றே நன்று
இது மாதிரி சினமா கதநாய்கர்களை கொண்டாடி விட்டு நமக்காக வாழ்ந்த வாழுகிற உள்ள்ளங்களை மறந்து விட்டால் அது எவ்வளவு பெரிய குற்றம் அதற்க்கு எடுத்துக்காட்டு தான் அந்த குரல் !!
“நாங்க இப்ப்போ தான் அப்படி இருப்போம் எங்களுக்குனு ஒரு வேலை குடும்பம்னு வந்துட்ட நாங்க இப்படி இருக்க மாட்டோம் ? ” அப்படி என்று நீங்கள் கூறவது கேட்கிறது
இப்படி இருந்தால் எப்படி வேலை வெட்டி கிடைக்கும்
சரி வேலை கிடைக்கிறது குடும்பம் வந்துவிடுகிறது
தலைவர்கள் ??
எங்கே ??
நீங்க தான் ஆகணும் ஆனா ஆகப்போறதில்லையே
யாரு பா அடுத்த ரஜினி காந்த் ..யாரு பா அடுத்த விஜய்
இப்படி எல்லாம் கேள்வி இருக்கு
யாரு பா அடுத்த வைரமுத்து
யாரு பா அடுத்த பாரதி ?
யாரு பா அடுத்த அப்துல் கலாம்னு எவனாவது கேட்கிறானா ?
உங்க வயசு இருக்கே 18 – 24 அது தான் அருமையான வயசு… காமம் தோன்றி அதை ஒரளவிற்க்கு புரிந்து கொண்டு மற்ற விஷியங்களிலும் சிறிது செயல் பட ஆரம்பிக்கும் நேரம் .You’re crossing your teenage .. அங்க தான் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் என்னவாக ஆகப்போகிறாள் என்று முடிவு எடுக்கிறான் நீங்க தான் சினிமா பக்தர்கள் ஆச்சே உங்க கண்ணு தான் மூடியே கெடக்கே அப்புறம் எங்க ?? சும்மா வாழ்ந்தோம் பேண்டோம் மோண்டோம் னு செத்து பொய்ருவீங்க அவ்வளோ தான் .. இப்படி இருக்கிறவர்கள் கண்டிப்பாக சாதிக்க முடியாது … ஏன் ஒழுங்காக வாழ்க்கை நடத்த கூட முடியாது !!
தோழர்களே ..சிந்தியுங்கள்
“உங்கள தற்க்காளிகமா குஷிப்படுத்துகிறவர்கள் உண்மையான ஹீரோக்கள் அல்ல ..உங்கள் வாழ்வு முழுவதும் ஆனந்தமாக வாழ பாடு பட்டவர்கள் படுகிறவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ”
நடிகர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் இதை படித்த பிறகும் எந்த தவரும் இல்லை என்று நீங்க நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள் !! உங்கள் விருப்பம் இனிமேல் !!

Credits: Harry poter vaaya

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s